சீனாவின் ஹீ ஜிடிங் மற்றும் ரென் சியாங்யு ஆகியோரை வீழ்த்தி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சீனாவில் நடைபெற்ற சீனா மாஸ்டர்ஸ் பூப்பந்தாட்டப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றனர்.
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பேடிங்கிலோ-போமா வலசை போகும் நிலப்ப ரப்பானது தெற்கு சூடானின் முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இது போமா தேசியப் பூங்கா மற்றும் பேடிங்கிலோ தேசியப் பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கியதோடு சிறந்த நைல் வலசை போகும் நிலப்பரப்பின் (GNML) ஒரு பகுதியாகவும் உருவாகியுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள உதயபூர்-தல்சாரி வனப்பகுதியில் உள்ள சவுக்கு மரத் தோட்டத்தில் இருந்து ஐந்து இளம் ஒராங்குட்டான்கள் மீட்கப்பட்டன.
ஒராங்குட்டான்கள் IUCN அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் செந்நிறப் பட்டியலில் மிக அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு மேலும் இவை இயற்கையாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் காடுகளில் காணப் படுகின்றன, இந்தியாவில் அல்ல.
சிறந்த காற்றின் தரத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் நீல வானத்திற்கான சுத்தமான காற்றின் சர்வதேச தினமானது 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று அனுசரிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Clean Air, Healthy Choices: Acting Together for People and Planet” என்பதாகும்.
காவல்துறை மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் முகமைகளுக்கு இடையிலான சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினமானது செப்டம்பர் 7 அன்று அனுசரிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Protecting against Vulnerability – Building Trust and Legitimacy in Policing” என்பதாகும்.