பூபன் ஹசாரிகாவின் 100 ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 8 அன்று நினைவு கூரப் பட்டது.
1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று அசாமின் சாடியாவில் பிறந்த பூபன் ஹசாரிகா ஒரு பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்தார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், 1952 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பிஸ்டிர்னோ பரோரே, மொய் எடி ஜஜாபோர், மானுஹே மனுஹோர் பேப் மற்றும் புகு ஹோம் ஹோம் கோரே ஆகியவை இவரது புகழ்பெற்ற படைப்புகளாகும்.
இவருக்கு மறைவுக்குப் பின் பத்ம விபூஷண் (2012) மற்றும் இந்தியாவின் மிக உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா (2019) ஆகியவை வழங்கப்பட்டன.
இவர் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 5 அன்று மும்பையில் காலமானார்.