உலக டுசென் விழிப்புணர்வு தினம் 2026 - செப்டம்பர் 07
September 11 , 2026 2 days 36 0
இந்நாள் அரிய முற்போக்கான மரபணு கோளாறு மற்றும் குழந்தைகளிடம் காணப் படும் பொதுவான அரிய மரபணு நோய்களில் ஒன்றான டுசென் தசைச் சிதைவு (DMD) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
X குரோமோசோமில் உள்ள DMD மரபணுவில் ஏற்படும் பிறழ்வுகளால் இது ஏற்படுகிறது, இது தசைகளைப் பாதுகாக்கும் டிஸ்ட்ரோபின் புரதக் குறைபாட்டிற்கு வழி வகுக்கிறது.
இது முக்கியமாக ஆண்களைப் பாதிக்கிறது மற்றும் படிப்படியாக தசை பலவீனத்தை ஏற்படுத்துகிறது, இறுதியில் இயக்கம், சுவாசம் மற்றும் இதய செயல்பாட்டை பாதிக்கிறது.
1860களில் இதை விரிவாக விவரித்த மருத்துவர் டுசென் டி பவுலோன் என்பவரின் நினைவாக இந்த நோய்க்கு பெயரிடப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Family: the heart of care" என்பதாகும்.