TNPSC Thervupettagam

தேசிய துப்புரவுத் தொழிலாளர்கள் ஆணையத்தில் புதிய நியமனங்கள்

September 11 , 2026 2 days 31 0
  • தேசிய துப்புரவுத் தொழிலாளர்கள் ஆணையத்தின் (NCSK) தலைவராக பகவத் பிரசாத் மக்வானாவும், துணைத் தலைவராக கைஷப் பிஹாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தேசிய துப்புரவுத் தொழிலாளர்கள் ஆணையச் சட்டம் 1993 இன் கீழ் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று NCSK அமைக்கப்பட்டது, மேலும் 2004 ஆம் ஆண்டில் இச்சட்டம் காலாவதியான பிறகு இது ஒரு சட்டப்பூர்வமற்ற அமைப்பாக மாறியது.
  • இது துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவோரின் நலன், கண்ணியம், உரிமைகள் மற்றும் மறுவாழ்வுக்காக சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • இது 2013 ஆம் ஆண்டின் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களாகப் பணி அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டத்தை செயல் படுத்துவதைக் கண்காணிக்கிறது.
  • தற்போதைய 10 ஆவது ஆணையத்தின் பதவிக்காலம் 2028 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்