TNPSC Thervupettagam

தூய்மையான காற்றுக் கணக்கெடுப்பு விருதுகள் 2026

September 11 , 2026 2 days 48 0
  • தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் (NCAP) கீழ் சிறந்த செயல்பாட்டைக் கொண்ட நகரங்கள் மற்றும் வார்டுகளை அங்கீகரிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் தூய்மையான காற்று தினத்தின் போது 5 ஆவது தூய்மையான காற்று கணக்கெடுப்பு விருதுகள் 2026 வழங்கப் பட்டன.
  • 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் லக்னோ முதலிடத்திலும், இந்தூர் மற்றும் ஜபல்பூர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • 3 முதல் 10 லட்சம் வரையிலான பிரிவில் ரூர்கேலாவும் (ஒடிசா), 3 லட்சத்திற்கும் குறைவான பிரிவில் கலிங்கநகரும் (ஒடிசா) முதலிடம் பிடித்துள்ளன.
  • இந்தக் கணக்கெடுப்பு 130 NCAP நகரங்களை உள்ளடக்கியதுடன் சாலைத் தூசிக் கட்டுப்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் வாகன/தொழில்துறை உமிழ்வுகள் போன்ற நடவடிக்கைகளை மதிப்பிடுகிறது.
  • 2025-26 ஆம் ஆண்டில், 130 நகரங்களில் 108 நகரங்கள் நுண்துகள் 10 (PM10) அளவுகளில் குறைவைப் பதிவு செய்துள்ளன; 26 நகரங்கள் 40% க்கும் அதிகமான குறைவை எட்டி ள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்