TNPSC Thervupettagam

நீர் சேமிப்பில் சத்தீஸ்கர் முதலிடம்

September 11 , 2026 2 days 48 0
  • மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலில் சமூகப் பங்கேற்பை மையமாகக் கொண்ட ஜல் சக்தி அமைச்சகத்தின் முன்னெடுப்பான ஜல் சஞ்சய் ஜன் பாகிடாரியின் (JSJB) மூன்றாம் கட்டத்தில் தேசிய அளவில் சத்தீஸ்கர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
  • JSJB 3.0 இன் கீழ், இம்மாநிலம் 79,775 நீர்-பாதுகாப்பு கட்டமைப்புகளைப் பதிவு செய்தது, அவற்றில் 77,719 கட்டமைப்புகள் முடிக்கப்பட்டுள்ளன; சூரஜ்பூர், மகாசமுந்த், பலோட், பலோடா பஜார்-பதாபாரா மற்றும் கபீர்தாம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்தியாவின் சிறந்த 10 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ளன.
  • JSJB ஆனது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது; அதன் 2026 ஆம் ஆண்டுப் பதிப்பு விரிவுபடுத்தப்பட்டு, 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் ஜல் சக்தி அபியான்: கேட்ச் தி ரெயின் (JSJB: CTR) என இணைக்கப்பட்டது.
  • இந்த முன்னெடுப்பானது முழு-அரசாங்க மற்றும் முழு-சமூக அணுகுமுறையின் மூலம் குறைந்த செலவிலான நீர்-சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்-செறிவூட்டல் கட்டமைப்புகள், செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளைப் புதுப்பித்தல் மற்றும் உள்ளூருக்கு ஏற்ற தீர்வுகளை ஊக்குவிக்கிறது.
  • சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தின் '5% மாதிரி' விவசாயிகளைத் தங்களின் விவசாய நிலங்களில் சுமார் 5%-ஐ மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலுக்குத் தாமாக முன்வந்து பயன்படுத்த ஊக்குவிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 நிலவரப்படி, JSJB இன் கீழ் இந்தியா முழுவதும் 1.58 கோடிக்கும் அதிகமான செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்