2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் (ஊட்டி) அருகே உள்ள பட்டர்ஃபையரில் (Buttfire) தமிழ்நாடு அரசின் முதல் பிரத்யேக ஸ்கேட் பூங்கா (skate park) திறக்கப்பட்டது.
சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதமியில் (OTA) இந்திய ராணுவத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட கார்கில் மாவட்டத்தின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை ஸ்டான்சின் சாங்யாங் பெற்றார்.
லடாக்கின் ஜான்ஸ்கர் (Zanskar) மாவட்டத்திலிருந்து இந்திய ராணுவத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார்.
அஸ்ட்ராஜெனெகாவின் (AstraZeneca) மார்பகப் புற்றுநோய் மருந்தான காமிசெஸ்ட்ரான்ட் (camizestrant - Etcamah), மேம்பட்ட ஹார்மோன்-ஏற்பி-நேர்மறை, HER2-எதிர்மறை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1,371 நோயாளிகளை உள்ளடக்கிய ஓர் இறுதிக்கட்ட சோதனையில், முன்னேற்றமில்லா உயிர்வாழ்வை (progression-free survival) கணிசமாக மேம்படுத்துவதில் தோல்வியடைந்தது.
ஆயுத மோதல்களின் போது கல்வியைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று தாக்குதலில் இருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Can Education Survive Attack? The Resilience of Human Communities என்பதாகும்.
தற்கொலையை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக கருதி அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு முயற்சிகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 அன்று உலக தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது.
2024–2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Changing the Narrative on Suicide மற்றும் அதன் செயல் அழைப்பு Start the Conversation என்பதாகும்.