TNPSC Thervupettagam

சங்க கால நீர் மேலாண்மை அமைப்பு

September 13 , 2026 2 days 49 0
  • திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கூகூரில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் வெளிப்பட்ட செங்கல் அமைப்பு, தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையால் (TNSDA) சங்க கால நீர் மேலாண்மை அமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்த அமைப்பானது பழமையான கல்லணைக்கு அருகே, கொள்ளிடத்தின் வடக்குக் கரையிலிருந்து சுமார் 100 மீ தொலைவில் அமைந்துள்ளது.
  • இதன் செங்கற்கள் சுமார் 39–43 செ.மீ × 20–22 செ.மீ × 6–7 செ.மீ அளவுடையவை, இவை அரிக்கமேடு, கீழடி, மாங்குளம் மற்றும் பூம்புகாரில் காணப்பட்ட செங்கற்களைப் போலவே உள்ளன.
  • இந்த அமைப்பு தடுப்பணைக்கு நிகரான பழமையான நீர் மேலாண்மை அமைப்பான 'குரம்பு' (Kurampu) உடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது.
  • இது உள்ளாறு வழியாக கொள்ளிடத்திற்குள் காவிரி நீர் செல்வதை முறைப்படுத்த உதவியிருக்கலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்