TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 13 , 2026 2 days 21 0
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் (ஊட்டி) அருகே உள்ள பட்டர்ஃபையரில் (Buttfire) தமிழ்நாடு அரசின் முதல் பிரத்யேக ஸ்கேட் பூங்கா (skate park) திறக்கப்பட்டது.
  • சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதமியில் (OTA) இந்திய ராணுவத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட கார்கில் மாவட்டத்தின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை ஸ்டான்சின் சாங்யாங் பெற்றார்.
    • லடாக்கின் ஜான்ஸ்கர் (Zanskar) மாவட்டத்திலிருந்து இந்திய ராணுவத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார்.
  • அஸ்ட்ராஜெனெகாவின் (AstraZeneca) மார்பகப் புற்றுநோய் மருந்தான காமிசெஸ்ட்ரான்ட் (camizestrant - Etcamah), மேம்பட்ட ஹார்மோன்-ஏற்பி-நேர்மறை, HER2-எதிர்மறை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 1,371 நோயாளிகளை உள்ளடக்கிய ஓர் இறுதிக்கட்ட சோதனையில், முன்னேற்றமில்லா உயிர்வாழ்வை (progression-free survival) கணிசமாக மேம்படுத்துவதில் தோல்வியடைந்தது.  
  • ஆயுத மோதல்களின் போது கல்வியைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று தாக்குதலில் இருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Can Education Survive Attack? The Resilience of Human Communities என்பதாகும்.
  • தற்கொலையை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக கருதி அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு முயற்சிகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 அன்று உலக தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2024–2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Changing the Narrative on Suicide மற்றும் அதன் செயல் அழைப்பு Start the Conversation என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்