TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 14 , 2026 15 hrs 0 min 10 0
  • புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்திய தடகளத் தொடரின் இறுதிப் போட்டியில், டான்யா சவுத்ரி 68.35 மீட்டர் தூரம் எறிந்து பெண்களுக்கான குண்டு எறிதலில் புதிதாக இந்திய தேசிய சாதனையைப் படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
  • கேரளாவின் இடுக்கியில் உள்ள மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவில் சுமார் 1,351 மீட்டர் உயரத்தில், பாறைகளில் வளரும் புதிய வகை மரப்பாசியான 'புல்லியா மகாராஜென்சிஸ்' (Buellia maharajensis) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இந்த இனத்திற்கு அக்கல்லூரியின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
  • 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக புது தில்லியில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழி பெயர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார்.
  • ரஷ்ய மற்றும் வட கொரிய எல்லை நகரங்களான காசன் (ரஷ்யா) மற்றும் ரசன் (வட கொரியா) ஆகியவற்றை இணைக்கின்ற முதல் சாலைப் பாலமானது டுமென் ஆற்றின் குறுக்கே திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 22 ஆவது வருடாந்திர இருதரப்பு இராணுவப் பயிற்சியான 'யுத் அபியாஸ்', ராஜஸ்தானின் பிகானேர் மற்றும் உத்தர காண்டின் அவுலி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.
  • இந்திய கடற்படை மற்றும் ராயல் மலேசிய கடற்படை (RMN) இடையேயான இருதரப்பு கடல்சார் பயிற்சியான சமுத்திர லட்சுமணாவின் 4வது பதிப்பில் பங்கேற்பதற்காக INS மைசூர் மலேசியாவின் லுமுட் வந்தடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்