TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 22 , 2026 10 days 104 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை - மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் (ICAR-CMFRI) அறிவியலாளர்கள் அரபிக்கடலில் இருந்து புதிய விலாங்கு மீன் இனத்தை (eel species) அடையாளம் கண்டுள்ளனர்.
    • இந்த புதிய மீன் இனத்திற்கு CMFRI-இன் நினைவாக அரியோசோமா சிம்ஃப்ரியென்சி (Ariosoma cmfriense) என்று பெயரிடப்பட்டது.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில், தென்னாப்பிரிக்க சிறுத்தையான ஜெமினியின் மகளான, இந்தியாவில் பிறந்த KGP12 சிறுத்தை நான்கு குட்டிகளை ஈன்றதை அடுத்து இந்தியாவின் சிறுத்தைகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
  • தேசிய பட்டியலிடப்பட்ட சாதியினர் ஆணையத்தின் (NCSC) தலைவர் கிஷோர் மக்வானா, 2026 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மக்கள் சேவை விருதினைப் பெற்றுள்ளார்.
  • எகிப்தின் இரண்டாவது எல் அலாமைன் (El Alamein) சர்வதேச விமானக் கண்காட்சியில், இந்திய விமானப் படையின் (IAF) சாரங் ஹெலிகாப்டர் வான்சகசக் குழு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றதுடன் இதில் ராணுவம், வணிகம் மற்றும் தனியார் விமானங்கள், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் மேம்பட்ட விமானத் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
  • சமமான மதிப்புள்ள வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 அன்று சர்வதேச சம ஊதிய தினம் கடைபிடிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Equal Pay for Work of Equal Value — For Everyone, Everywhere.” என்பதாகும்.
  • செந்நிற பாண்டாக்கள் பாதுகாப்பு மற்றும் வாழ்விட இழப்பு, காடழிப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று (செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை) சர்வதேச செந்நிறப் பாண்டா விழிப்புணர்வு தினம் கடை பிடிக்கப் பட்டது.
    • சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) செந்நிறப் பாண்டாவை அருகி வரும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்