TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 2 , 2026 15 hrs 0 min 18 0
  • பீகார் மாநிலச் சட்டப் பணிகள் ஆணைக்குழு (BLSA) பாட்னாவில் ஒரு சோதனைத் திட்டமாக நாட்டின் முதல் 'பாதிக்கப்பட்டோர் உரிமைகள் மையத்தை' நிறுவ உள்ளது.
    • இம்மையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை அணுகுவதற்கும் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அடையாளம் காண்பதற்கும் ஒரே நுழைவாயிலாக அமைகிறது.
  • கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ரோஸ்மலாவில் ஜவகர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JNTBGRI) ஆராய்ச்சியாளர்கள் 'பெகோனியா ராஜ்விக்ரமனீ' என்ற புதிய பெகோனியா தாவர இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
    • JNTBGRI-இன் தோட்ட மேலாண்மைப் பிரிவின் முன்னாள் தலைவரான ஆர். ராஜ் விக்ரமனின் நினைவாக இந்த இனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
  • ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிக உயர மற்றும் விமான சோதனைகளின் போது, இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட காவேரி உலர் இயந்திரம் 48.5 கிலோநியூட்டன்கள் (kN) என்ற அதிகபட்ச உலர் உந்துதலை அடைந்தது.
    • இந்தியாவின் கடாக் (Ghatak) ஆளில்லா போர் விமானத்திற்காக (UCAV) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) இந்த இயந்திரம் உருவாக்கப் பட்டுள்ளது.
  • கால்நடை காப்பீட்டுச் சேவைகளை நெறிப்படுத்துவதற்காக புது தில்லியில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பசுதன் பீமா இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
    • கால்நடைகளைச் சார்ந்திருக்கும் குடும்பங்களை நிதி இழப்புகளில் இருந்து பாதுகாப்பதையும், கிராமப்புற வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இந்த இணையதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அசாமில் உள்ள ஒராங் தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் முதல்முறையாக இந்திய மயில் (பாவோ கிரிஸ்டேட்டஸ்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்திய மயில் இந்தியாவின் தேசியப் பறவையாகும், மேலும் இது ஃபெசண்ட் குடும்பத்தை (ஃபாசியானிடி) சேர்ந்ததாகும்.
  • கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று உலக கருத்தடை தினம் அனுசரிக்கப்பட்டது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு No Barriers, Just Choices என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்