2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று ஃபாஸ்டேக் (FASTag) வருடாந்திர பாஸ் / பயணச் சீட்டானது ஒரு கோடி வழங்கப்பட்ட பாஸ்களைக் கடந்துள்ளது, மேலும் இது முறையான ஃபாஸ்டேக் கொண்ட தனியார், வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, இது ராஜ்மார்க் யாத்ரா செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய (NHAI) வலைத்தளத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பாஸ்/பயணச்சீட்டானது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் (NHAI) தொடங்கப்பட்டது.
ஜார்க்கண்டின் பாரம்பரிய நாட்டுப்புற தாள வாத்தியமான மந்தருக்கு (Mandar) சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டுப் பதிவேட்டில் இருந்து புவிசார் குறியீடு (Geographical Indication - GI) வழங்கப்பட்டுள்ளது.
மந்தர் என்பது இரு முனைகளிலும் வெவ்வேறு அளவிலான தோல் மூடிய திறப்புகளைக் கொண்ட உருளை வடிவ செம்மண் நிற பாகத்தைக் கொண்டுள்ளதுடன், மேலும் இது ஜார்க்கண்டின் பழங்குடி மற்றும் நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப் படுகிறது.
தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள கெர்குலன் தீவுகளில் இருந்து பைகோசெலிஸ் கெர்குலென்சிஸ் (Pygoscelis kerguelensis) என்ற புதிய ஜென்டூ பென்குயின் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர், இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கீகரிக்கப்பட்ட முதல் புதிய பென்குயின் இனமாகும்.
பட்சர் தீவு (Butcher Island) என்றும் அழைக்கப்படும் மும்பையில் உள்ள ஜவகர் தீவுக் கடல் எண்ணெய் முனையம், இந்தியாவின் முதல் நெகிழி இல்லாத எண்ணெய் முனையமாக அறிவிக்கப்பட்டது.
25 லட்சத்திற்கும் அதிகமான லில்லியம் மலர்களைக் கொண்ட உலகின் மிக உயரமான மலர் தோட்டம் என்று விவரிக்கப்படும் சோக்லாம்சரின் 10,600 அடி (3,265 மீ) உயர மலர் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 15,000 A-கிரேடு லில்லியம் தண்டுகளின் முதல் தொகுதியை லடாக், லேவில் உள்ள KBR விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய சந்தைகளுக்கு அனுப்பியுள்ளது.
வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் ஆண்டுதோறும் வனவிலங்கு வாரம் கொண்டாடப்படுகிறது, மேலும் இது முதன்முதலில் 1952 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Connecting Habitats and Thriving Wildlife என்பதாகும்.