பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி-தகவலியல் நிறுவனம் (BISAG-N) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் ஆகியவற்றுக்கு இடையே இந்தியாவின் முதல் 5.56 கி.மீ தொலைவிலான திறந்தவெளி குவாண்டம் விசை விநியோக (QKD) இணைப்பை இந்தியா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்திற்கு கூட்டாட்சி அரசாங்கத்தின் எதிர் வினையை ஒருங்கிணைக்க, அமெரிக்கா ஒரு புதிய "சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஃபோர்ஸ்/அதி உயர் அறிவுத்திறன் கொண்ட படை" எனும் சிறப்புப் படையை அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று அதானி அகமதாபாத் மாரத்தான் உலக தடகளப் போட்டியானது உலகளாவிய நாட்காட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாரத்தானின் 10 ஆவது பதிப்பு 2026 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
ஒரு அரிய வகை ஜப்பானிய சிட்டுக்குருவி வல்லூறு (டாக்கிஸ்பிசா குலாரிஸ்) சென்னையின் அடையாறு முகத்துவாரத்தில் காணப்பட்டது, இது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மூன்றாவது நிகழ்வாகும்.
ஜப்பானிய சிட்டுக்குருவி வல்லூறு IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த (Least Concern) இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குனோ தேசியப் பூங்கா (மத்தியப் பிரதேசம்) மற்றும் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் (மத்தியப் பிரதேசம்) ஆகியவற்றுக்குப் பிறகு, வீராகானா துர்காவதி புலிகள் காப்பகம் (VDTR) அம்மாநிலத்தின் மூன்றாவது சிவிங்கிப்புலிகள் வாழ்விடமாக மாற உள்ளது.
நௌராதேஹி புலிகள் காப்பகம் என்றும் அழைக்கப்படும் VDTR, மத்தியப் பிரதேசத்தின் சாகர், தாமோ மற்றும் நரசிங்கபூர் மாவட்டங்களில் சுமார் 2,339 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
ஆசிரியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கவும், அவர்களின் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு சிறந்த ஆதரவை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் அக்டோபர் 5 அன்று உலக ஆசிரியர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures" என்பதாகும்.