போதுமான தங்குமிடம் மற்றும் மனித குடியிருப்புகளின் நிலையை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
3 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குப் போதுமான வீட்டுவசதி இல்லை, அதே நேரத்தில் 1.1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் முறைசாரா குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.
இந்த நாளானது 'நகர்ப்புற அக்டோபர்' (Urban October) மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது, இது அக்டோபர் 31 அன்று உலக நகரங்கள் தினத்துடன் முடிவடைகிறது.
போதுமான தங்குமிடத்திற்கான அடிப்படை உரிமையை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை (UN) 1985 ஆம் ஆண்டில் உலக வாழ்விட தினத்தை நியமித்தது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Adequate Housing for All” என்பதாகும்.