TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 8 , 2026 3 days 59 0
  • பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி-தகவலியல் நிறுவனம் (BISAG-N) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் ஆகியவற்றுக்கு இடையே இந்தியாவின் முதல் 5.56 கி.மீ தொலைவிலான திறந்தவெளி குவாண்டம் விசை விநியோக (QKD) இணைப்பை இந்தியா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்திற்கு கூட்டாட்சி அரசாங்கத்தின் எதிர் வினையை ஒருங்கிணைக்க, அமெரிக்கா ஒரு புதிய "சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஃபோர்ஸ்/அதி உயர் அறிவுத்திறன் கொண்ட படை" எனும் சிறப்புப் படையை அறிவித்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று அதானி அகமதாபாத் மாரத்தான் உலக தடகளப் போட்டியானது உலகளாவிய நாட்காட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது.
    • இந்த மாரத்தானின் 10 ஆவது பதிப்பு 2026 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
  • ஒரு அரிய வகை ஜப்பானிய சிட்டுக்குருவி வல்லூறு (டாக்கிஸ்பிசா குலாரிஸ்) சென்னையின் அடையாறு முகத்துவாரத்தில் காணப்பட்டது, இது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மூன்றாவது நிகழ்வாகும்.
    • ஜப்பானிய சிட்டுக்குருவி வல்லூறு IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த (Least Concern) இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • குனோ தேசியப் பூங்கா (மத்தியப் பிரதேசம்) மற்றும் காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் (மத்தியப் பிரதேசம்) ஆகியவற்றுக்குப் பிறகு, வீராகானா துர்காவதி புலிகள் காப்பகம் (VDTR) அம்மாநிலத்தின் மூன்றாவது சிவிங்கிப்புலிகள் வாழ்விடமாக மாற உள்ளது.
    • நௌராதேஹி புலிகள் காப்பகம் என்றும் அழைக்கப்படும் VDTR, மத்தியப் பிரதேசத்தின் சாகர், தாமோ மற்றும் நரசிங்கபூர் மாவட்டங்களில் சுமார் 2,339 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • ஆசிரியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கவும், அவர்களின் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு சிறந்த ஆதரவை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் அக்டோபர் 5 அன்று உலக ஆசிரியர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்