TNPSC Thervupettagam

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2026

October 7 , 2026 4 days 129 0
  • ஒளிக் கட்டுப்பாட்டு அயனி தடங்கள் (light-gated ion channels) மற்றும் ஆப்டோஜெனெடிக்ஸ் (optogenetics) தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசினை கார்ல் டெய்செரோத், பீட்டர் ஹெஜ்மேன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோர் கூட்டாக வென்றுள்ளனர்.
  • ஹெஜ்மேன் மற்றும் நாகல் ஆகியோர் உயிரணுக்களை ஒளியின் மூலம் செயல்பட வைக்கும் சேனல்ரோடாப்சின் (channelrhodopsin) என்ற புரதத்தைக் கண்டுபிடித்தனர்.
  • உயிருள்ள எலிகளின் மூளை உட்பட நரம்பு செல்களை ஒளியைக் கொண்டு கட்டுப்படுத்த டெய்செரோத் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்.
  • ஆப்டோஜெனெடிக்ஸ் முறையானது, ஒளியைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பு செல்களை இயக்க அல்லது தடுக்க அறிவியலாளர்களை அனுமதிக்கிறது, இது நினைவாற்றல் மற்றும் இயக்கம் போன்ற மூளையின் செயல்பாடுகளைப் படிக்க உதவுகிறது.
  • இந்தத் தொழில்நுட்பம் பார்கின்சன் நோய், மனச்சோர்வு மற்றும் அடிமையாதல் போன்ற நரம்பியல் கோளாறுகளைப் படிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தப் பரிசானது சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் உள்ள நோபல் சபையால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்