TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 20 , 2026 4 days 125 0
  • கூகுள் டீப்மைண்ட் நிறுவனமானது சிக்கலான மென்பொருள் பொறியியல், வணிகம், சட்டம், நிதி மற்றும் இணைய பாதுகாப்புப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஜெமினி 4 ஆர்கான் (Gemini 4 Argon) என்ற மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியது.
  • தெற்கு ரயில்வேயானது தமிழ்நாட்டின் முதல் விஸ்டாடோம் (Vistadome) பெட்டியை மதுரை-குருவாயூர் விரைவு ரயிலில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 22 முதல் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் அறிமுகப் படுத்த உள்ளது.
  • பண்டிகைக் காலத்திற்கு முன்பாக வெங்காயத்தின் இருப்பை மேம்படுத்தவும், விலையைக் கட்டுப்படுத்தவும் சுமார் 440 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றிச் செல்லும் முதல் காந்தா விரைவு ரயிலை (Kanda Express) நுகர்வோர் விவகாரங்கள் துறை திரிபுராவின் அகர்தலாவிற்குத் தொடங்கி வைத்துள்ளது.
    • இந்த முன்னெடுப்பானது வெங்காய விநியோகத்தை மேம்படுத்தவும், விலையை கட்டுப்படியாகக் கூடிய வகையில் வைத்திருக்கவும் விலை நிலைப்படுத்தல் நிதியத்தின் (PSF) கீழ் வெங்காய இருப்புகளை விநியோகிக்கிறது.
  • உலகளவில் பெண்களுக்கான மாதவிடாய் நிறுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆதரவு மற்றும் கவனிப்பை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் அக்டோபர் 18 அன்று உலக மாதவிடாய் நிறுத்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Chronic Pain at Midlife என்பதாகும்.
  • தகவலறிந்த முடிவெடுத்தல் மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான நம்பகமான புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 அன்று உலகப் புள்ளிவிவர தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்