TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 28 , 2026 15 hrs 0 min 71 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுக்கான பிரின்சஸ் ஆஃப் அஸ்டூரியாஸ் விருதினை லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்; மேலும் இந்த விருதினைத் தனிநபராக வெல்லும் முதல் கால்பந்து வீரர் இவராவார்.
  • இங்கிலாந்தின் கிரேட் விர்லியில் நடைபெற்ற WBL உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி தனது 29 ஆவது உலக பட்டத்தை வென்றார்.
  • இந்திய இயற்பியலாளர் அசோக் சென் 2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் க்ளீன் பதக்கத்தை வென்றுள்ளார் என்பதோடு இந்த விருதைப் பெறும் முதல் இந்திய இயற்பியலாளர் இவராவார்.
  • மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (SDAL) நிறுவனத்திடமிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாகாஸ்திரா-2 பீரங்கி எதிர்ப்புத் தாக்குதல் தளவாடங்களை இந்திய ராணுவம் பெற்று வருகிறது.
  • ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள கியூஷு தீவின் தெற்கே பெரும்பாலும் கடலடியில் மூழ்கியுள்ள சூப்பர் எரிமலையான கிகை கால்டெராவிற்கு அடியில் புதிய மாக்மா குவிந்து வருவதை கோபி பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
    • சுமார் 7,300 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கிகை எரிமலை வெடிப்பு ஹோலோசீன் காலத்தின் அறியப்பட்ட மிகப்பெரிய எரிமலை வெடிப்பாகும்.
  • நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் கருத்துரு Probity for Prosperity என்பதாகும்.
  • ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு (MIL) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தகவல்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்தல், புரிந்துகொள்ளுதல் மற்றும் பொறுப்புடன் பயன்படுத்துதல் ஆகிய திறன்களை மேம்படுத்தவும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் 31 ஆம் தேதி வரை உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டு உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் கல்வியறிவு வாரத்தின் கருத்துரு We All Play a Part – Media and Information Literacy for the People என்பதாகும்.

SAKTHIVEl October 28, 2026

Uploaded

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்