அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ முழக்கமாக "ஸ்டார்ஸ் அலைன்" (Stars Align) என்பதை லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 (LA28) அமைப்புக்குழு வெளியிட்டது.
நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், கனடா நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஜோசுவா குட்ரிக் என்பவருடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தனது நான்காவது விண்வெளி நடையை நிறைவு செய்தார்.
பிலிப்பைன்ஸின் அல்பே மாகாணத்தில் உள்ள மேயான் எரிமலை வெடித்துச் சிதறியதில், அதன் உச்சியிலிருந்து 3,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை மண்டலம் வெளியேறியது.
இமயமலையின் சிக்கிம் பகுதியில் வளரும் பானாக்ஸ் சோக்பாயென்சிஸ் (Panax sokpayensis) எனப்படும் மருத்துவ தாவரத்தின் வேர்த்தண்டுக் கிழங்கிலிருந்து (நிலத்தடித் தண்டு) மோலிசியா சோக்பாயென்சியா (Mollisia sokpayensia) என்ற புதிய பூஞ்சை இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெல்லி மீன்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளில் அவற்றின் பங்கு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 அன்று உலக ஜெல்லி மீன் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜெல்லி மீன்கள் என்பவை பவளப்பாறைகள் மற்றும் கடல் அனிமோன்களை உள்ளடக்கிய நிடாரியா (Cnidaria) தொகுதியைச் சேர்ந்த பழமையான கடல்சார் முதுகெலும்பற்ற உயிரினங்களாகும்.