TNPSC Thervupettagam

உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளின் பங்கு

November 5 , 2026 2 days 73 0
  • உச்ச நீதிமன்றம் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் பொதுவான மொழியாக ஆங்கிலத்தைத் தொடருவது என்ற 1965 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (MHAA) பொதுநல வழக்கை (PIL) தாக்கல் செய்துள்ளது.
  • 1965 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவானது, இந்தி ஒரு பொதுவான மொழியாக பொருத்தமானதாக மாறும் வரை ஆங்கிலத்தைத் தொடர பரிந்துரைத்தது மற்றும் உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை அறிமுகப்படுத்துவதை எதிர்த்தது.
  • இந்த முடிவானது அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 ஆகிய சரத்துகளை மீறுவதாக MHAA வாதிட்டது.
  • சரத்து 348(2) ஆனது தீர்ப்புகள், ஆணைகள் மற்றும் உத்தரவுகளைத் தவிர்த்து, உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியைப் பயன்படுத்துவதற்கு, குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன், ஆளுநருக்கு அதிகாரமளிக்கிறது.
  • 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்துவதற்கான தமிழகத்தின் முன்மொழிவுகளை மத்திய அரசு நிராகரித்தது.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்