TNPSC Thervupettagam

தமிழ்நாடு கடலோரப் படகுப் போக்குவரத்துத் திட்டம்

November 5 , 2026 2 days 57 0
  • சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் கடல்சார் பயணிகள் சேவைகளை இயக்குவதற்கு தமிழ்நாடு கடல்சார் வாரியம் (TNMB) படகு சேவை நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரல்களை (EOI) அழைத்துள்ளது.
  • முன்மொழியப்பட்ட இந்த கடலோரப் படகுப் போக்குவரத்து வழித்தடமானது, சென்னை துறைமுகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கப்பல்துறையில் தொடங்கி புதுச்சேரி துறைமுகத்தில் முடிவடையும் வகையில் 80 கடல் மைல்களை (nautical miles) உள்ளடக்கியதாக இருக்கும்.
  • யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமான மாமல்லபுரத்தில், தற்போது படகு நிறுத்துமிட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை.
  • இந்தியா மற்றும் இலங்கை இடையேயான நாகப்பட்டினம் - காங்கேசன்துறை (யாழ்ப்பாணம்) படகுச் சேவைக்காக பல படகு சேவை நிறுவனங்களை உள்ளடக்கிய மாதிரியையும் TNMB முன்மொழிந்துள்ளது.
  • ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தப் படகுச் சேவையானது, புத்துயிர் பெற்றதிலிருந்து 66,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் போக்குவரத்தைப் பதிவு செய்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்