TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 24 , 2020 1821 days 808 0
  • இந்திய ஒலிம்பிக் மன்றமானது (Indian Olympic Association - IOA) ஆனது தனது புதிய அடையாளம் மற்றும் குறியீடு ஆகியவை ஏற்றுக் கொள்ளப் பட்டதின் ஒரு பகுதியாக “ஏக் இந்தியா அணி இந்தியா” என்ற ஒரு டிஜிட்டல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளது. இது ஒலிம்பிக் விளையாட்டுகளில் அதன் பங்கேற்பின் 100வது ஆண்டின் அனுசரிப்பைக் குறிக்கின்றது.
  • உலகம் முழுவதும் ஆடை அலங்காரத்தின் மகிமை, மனநிலை மற்றும் கலை ஆகியவற்றை அனுசரித்து, அதைக் கொண்டாடுவதற்காக உலக ஆடை அலங்கார தினமானது ஆகஸ்ட் 21 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • கேரள மாநில சட்ட சபையானது மக்களுக்குச் சட்டசபை செயல்பாடுகளைக் கொண்டு சேர்ப்பதற்காக வேண்டி “சபா தொலைக்காட்சி” என்ற ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கியுள்ளது.
  • மத்தியப் புலனாய்வுத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநரான  ராகேஷ் அஸ்தானா அவர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையின் பொது இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமானது தாய்மையடைவதற்கான வயது தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது குறித்து மறு ஆய்வு செய்வதற்காகவும் ஜெயா ஜேட்லி என்பவரின் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்