TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 28 , 2024 30 days 129 0
  • NLC இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனமானது, சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு உலகத் தூய்மை ஆற்றல் உச்சி மாநாட்டின் போது, சுரங்கப் பிரிவில் 2024 ஆம் ஆண்டு GEEF உலக சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றுள்ளது.
  • சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகள் களத்தில் ஆற்றிய மிகவும் அற்புதமான பணிக்காக பினா அர்கவால் மற்றும் ஜேம்ஸ் K. பாய்ஸ் ஆகியோருக்கு முதலாவது "உலகச் சமத்துவமின்மை ஆராய்ச்சி விருது" ஆனது வழங்கப்பட்டுள்ளது.
  • நாசா நிறுவனமானது, முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஒரு இயந்திரத்தை (என்ஜின்) சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
    • இந்தப் புதுமையான உந்துவிசை அமைப்பு ஆனது, சுழலும் வகையிலான வெடிப்பு முறையில் தூண்டுவிக்கப்படும் எந்திரம் (RDRE) என்று அழைக்கப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதியன்று, பீகார் மாநிலத்தில் அம்மாநிலத்தின் உருவாக்க தினத்தினை நினைவு கூரும் வகையில் பீகார் திவாஸ் தினம் கொண்டாடப் படுகிறது.
    • 1912 ஆம் ஆண்டில் பீகார் மற்றும் ஒரிசா ஆகியவை வங்காளத்தில் இருந்து தனி மாநிலங்களாகப் பிரிந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்