TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 16 , 2024 14 days 118 0
  • இந்திய-அமெரிக்க நடிகரும், 'Mean Girls' என்ற திரைப்பட நடிகையுமான அவந்திகா வந்தனாபு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த தெற்காசிய நபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பிரெஞ்சு வாகனத் தயாரிப்பு நிறுவனமான சிற்றோயின் (Citroën), இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 500  ë-C3 ரக மின்சார வாகனங்களை இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
    • இது ஒரு பன்னாட்டு மகிழுந்து உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் இருந்து மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்யும் முதல் நிகழ்வாகும்.
  • சிறப்பு நூலகர்களின் பங்களிப்பையும் தகவல் மேலாண்மையில் அவர்களின் சிறந்தப் பங்களிப்பினையும் பாராட்டுவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 13 ஆம் தேதியன்று சர்வதேச சிறப்பு நூலகர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்