திருநெல்வேலியைச் சேர்ந்த திருநரான ரேணுகா என்பவர், வருடாந்திர கூத்தாண்டவர் விழாவையொட்டி விழுப்புரத்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கூவாகம் அழகிப் பட்டத்தினை வென்றார்.
முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளர் அஜய் குமார், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சூரிய சக்திக் கழகத்தின் (SECI) தலைவரும் அதன் நிர்வாக இயக்குநருமான இராமேஷ்வர் பிரசாத் குப்தாவை, அவரது பதவிக் காலம் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இந்திய அரசாங்கம் பதவி நீக்கியுள்ளது.
டொமினிகன் குடியரசில் நடைபெற்ற உலக சட்ட மாநாட்டில், உலக நீதிபதிகள் சங்கத்தின் (WJA) மதிப்பு மிக்க 'மெடல் ஆஃப் ஹானர்' விருதைப் பெற்ற முதல் இந்திய வழக்கறிஞர் புவன் ரிபு ஆவார்.
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமானது, இந்தியாவில் அதன் செயற்கைக் கோள் வழியிலான இணையச் சேவைகளை இயக்குவதற்காக தொலைத்தொடர்புத் துறையிடம்மிருந்து (DoT) உறுதிப்பாட்டு ஆவணத்தினை (Letter of Intent) பெற்றுள்ளது.