TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 9 , 2025 4 days 48 0
  • கழிவுச் சேகரிப்பு நிறுவனங்கள் முதல் கழிவுச் சுத்திகரிப்பு வரையிலான மிகவும் ஒரு முழுமையான நெகிழிக் கழிவு மேலாண்மையின் சூழல் அமைப்பைக் கண்காணிக்க என்று தேசிய நெகிழிக் கழிவு அறிக்கையிடல் இணைய தளமானது தொடங்கப் பட்டு உள்ளது.
  • நாடு முழுவதும் 10 கோடி மரங்களை நடுவதை இலக்காகக் கொண்ட 'ஏக் பெட் மா கே நாம் 2.0' எனப் படும் நாடு தழுவிய மரம் நடும் பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டத்தினை இந்தியப் பிரதமர் தொடங்கினார்.
  • இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் (BIT) ஒப்புதலுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    • 2000 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதியன்று அமல்படுத்தப்பட்ட இதன் முந்தைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக அமையும் இந்தப் புதிய ஒப்பந்தமானது இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகளின் பாதுகாப்பில் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
  • முதல் முறையாக, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் விளைந்த 24 டன் அளவிலான செர்ரி பழங்கள் கத்ராவிலிருந்து (ஜம்மு) மும்பைக்கு இரயில் மூலம் அனுப்பப்பட்டன.
  • எலோன் மஸ்க், X செயலியில் (முன்னர் ட்விட்டர்) XChat எனப்படும் புதுப்பிக்கப்பட்ட நேரடிச் செய்தி (DM) அனுப்புதல் இடைமுகத்தினை அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • அனைத்து வகையான சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கும் சராசரி மாதாந்திர இருப்பு (AMB) தேவையை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்த முதல் பெரிய பொதுத் துறை வங்கியாக கனரா வங்கி உருவெடுத்துள்ளது.
  • ரஷ்ய மொழி தினமானது, சிறந்த ரஷ்யக் கவிஞராகவும், நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும் கருதப்படும் அலெக்சாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் பிறந்த நாளான ஜூன் 06 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்