TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 14 , 2025 21 days 73 0
  • சென்னையிலுள்ள SIMS என்ற மருத்துவமனையானது, மும்பையைச் சேர்ந்த 61 வயது நோயாளிக்கு இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சொருகு குழாய் வழி (டிரான்ஸ் கேத்தர்) பெருநாடி வால்வு மாற்று (TAVR) மற்றும் Frozen Elephant Trunk (FET) எனும் ஒட்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
  • புது டெல்லியில் நடைபெற்ற தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தின் (NIIF) ஆளுகைக் குழுவின் (GC) 6வது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் தலைமை தாங்கச் செய்தார்.
  • இந்திய லோக்பாலின் முழு அமர்வு ஆனது, "Empower Citizens, Expose Corruption" என்ற ஒரு புதிய முழக்கத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்தியக் கடற்படை மற்றும் ஐக்கியப் பேரரசின் கடற்படை ஆகியவை வட அரேபியக் கடலில் ஒரு ரோந்துப் பயிற்சியை (PASSEX) மேற்கொண்டன.
  • மங்கோலியாவில் 22வது கான் குவெஸ்டின் என்ற பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவம் பங்கேற்கிறது.
  • மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள வெங்குர்லாவில் உள்ள நிவதி ராக்ஸ் எனப் படும் பாறை அமைப்பு அருகே நிறுத்தப்பட்டுள்ள படையிலிருந்து நீக்கப் பட்ட INS குல்தார் எனும் போர்க்கப்பலைச் சுற்றி இந்தியாவின் முதல் கடலடி அருங் காட்சியகம் மற்றும் செயற்கை பவளப்பாறை ஆனது உருவாக்கப்பட உள்ளது.
  • புது டெல்லியில் 3வது சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU-T) தொலைத் தொடர்பு வலையமைப்புகளுக்கான AI-Native (FG-AINN) குறித்த கவனம் செலுத்தும் குழு கூட்டத்தினை இந்தியா நடத்தியது.
  • பிரான்சு நாட்டின் நைஸ் நகரில் நடைபெற்ற IALA சபையின் 2வது அமர்வில் சர்வதேச கடல்சார் உதவிகள் அமைப்பின் (IALA) துணைத் தலைமைப் பொறுப்பில் இந்தியா பங்கேற்றது.
  • இந்தியத் தர நிர்ணய சபையானது (QCI), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கான (MSME) எண்ணிம அங்கீகார அணுகலை மேம்படுத்துவதற்கும், தர நிலைகளுக்கான பொதுமக்களின் உறுதிப்பாட்டை மிக நன்கு ஊக்குவிப்பதற்கும் புதுப்பிக்கப் பட்ட NABL இணைய தளம் மற்றும் குன்வட்டா சமர்பன் முன்னெடுப்பைத் தொடங்கியது.

Bala murugan June 19, 2025

Good

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்