மேகக் கணிமச் சேவை வழங்கீட்டு நிறுவனமான ஓலா க்ருட்ரிம் ஆனது, க்ருதி எனப் படும் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு சார் முகமைக் கட்டமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது வாடகை வண்டிச் சேவைகளை முன்பதிவு செய்யவும், பிற கட்டணங்களைச் செலுத்தவும் மற்றும் பிற பணிகளைச் செய்யவும் உதவும்.
M V Wan Hai 503 எனும் சிங்கப்பூர் நாட்டின் சரக்குக் கப்பலானது, கேரளக் கடற்கரையில் உள்ள பேய்ப்பூர் கடற்கரையிலிருந்து 44 கடல் மைல் தொலைவில் வெடித்தது.
அது கொழும்புவிலிருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது.
வடக்கு டெல்லியின் ஹோலம்பி கலனில் இந்தியாவின் முதல் மின்னணுக் கழிவு சார் சுற்றுச்சூழல் பூங்காவினை உருவாக்கும் திட்டத்தினை டெல்லி அரசு மேற்கொண்டு உள்ளது.
இது 51,000 டன்கள் வரையிலான மின்னணுக் கழிவுகளைச் செயலாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடு இதில் 2022 ஆம் ஆண்டு மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சுமார் 106 வகை கழிவுகளும் அடங்கும்.