கூகுள் நிறுவனம் தனது முதன்முதலான பாதுகாப்பு பொறியியல் மையத்தினை (GSEC) ஐதராபாத்தில் உள்ள ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தொடங்கியது.
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆனது, IIFL செகியூரிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனரான சஞ்சீவ் பாசினை, front running (வர்த்தகம் சார் தகவல் திருட்டு) எனும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவருக்குப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது.
சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகமானது அதிகாரமளித்தல், உள்ளடக்கம் மற்றும் கலாச்சாரப் பெருமையுடன் கூடிய ஒன்றிய அரசாங்கத்தின் 11வது ஆண்டு நிறைவை நன்கு குறிக்கும் வகையில் புது டெல்லியில் லோக் சம்வர்தன் பர்வ் எனும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO), பால்டிக் ஆபரேஷன்ஸ் 2025 (BALTOPS 25) பெரிய அளவிலான வருடாந்திர பன்னாட்டு இராணுவப் பயிற்சியானது லாத்வியா நாட்டில் நடைபெற்றது.
ஹம்லே புல்புல் என்று வெகு பிரபலமாக அறியப்படும் புகழ்பெற்ற காஷ்மீர் பாடகர் உஸ்தாத் குலாம் நபி ஷா காலமானார்.
அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஆட்ரி ட்ருஷ்கே, "India: 5000 Years of History on the Subcontinent" என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதியன்று வாஷிங்டன் D.C. நகரில் அமெரிக்க நாட்டு இராணுவ அணிவகுப்பானது நடைபெற்றது.