இந்திய இராணுவம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப்படைகள் இணைந்து இராஜஸ்தானின் பாலைவனத்தில் 'போல்ட் குருசேத்ரா 2025' என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்கின.
விண்வெளி அறிவியலுக்கு அளித்த மிகச் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, இஸ்ரோவின் தலைவர் V. நாராயணனுக்கு G. பிர்லா நினைவு விருதினை G.பிர்லா தொல்பொருள், வானியல் மற்றும் அறிவியல் நிறுவனம் வழங்கியுள்ளது.
சர்வதேசப் புக்கர் பரிசு பெற்ற இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் 'Once Elephants Lived Here' என்ற புதினத்திற்கு 2025 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க PEN மொழி பெயர்ப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (IGNOU) துணை வேந்தராக உமா காஞ்சிலால் நியமிக்கப் பட்டுள்ளதையடுத்து, 1985 ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதிலிருந்து இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 28 ஆம் தேதி உலக இயற்கை வளங்காப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது, இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உலகளாவிய அளவில் நினைவூட்டுகிறது.