இந்திய இரயில்வே நிர்வாகமானது, சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ICF) ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் முதல் இரயில் பெட்டியை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
தமிழ்நாடு வனத்துறையின் சமூக அடிப்படையிலான சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முன்னெடுப்பு, உள்ளூர்ச் சமூகத்தின் ஈடுபாடு மூலம், கடலூர் அருகே உப்பனார் ஆற்றின் ஓரங்களில் தரமிழந்துள்ள ஓடையோரப் பகுதிகளுடன், பயன்படுத்தப்படாத ஓதங்களுக்கு இடைப்பட்ட தரிசு நிலத்தினையும் புனரமைத்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ஆளில்லா வான்வழி வாகனம் மூலம் துல்லியமாக ஏவப்படும் வழிகாட்டப்பட்ட எறிகணையின் (ULPGM)-V3 ஏவுதல் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சீனக் குடிமக்களுக்கான சுற்றுலா நுழைவு இசைவுச் சீட்டுகளை இந்தியா மீண்டும் தொடங்க உள்ளது.
உலக IVF தினம் அல்லது உலக கருவியல் நிபுணர் தினம் ஆனது, ஜூலை 25 ஆம் தேதி, செயற்கை கருவுறுதல் முறை (IVF) மூலம் பிறந்த உலகின் முதல் குழந்தையான லூயிஸ் பிரவுனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேச அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் இந்திரா காந்தி தேசியப் பழங்குடியின பல்கலைக்கழகம் (IGNTU) ஆகியவை போபாலில் பஞ்சாயத்து அமைப்புகளின் விதிகள் குறித்த சிறப்பு மையம் (திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், 1996 (PESA) நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அமர்கந்தக்கில் உள்ள IGNTU மையம் ஆனது, ஆராய்ச்சி, பயிற்சி, உள்ளாட்சித் திட்டமிடல் மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான கொள்கை வழிகாட்டுதல் மூலம் பழங்குடியின சுயாட்சியை ஆதரிக்கும்.