தெலுங்கானா காவல்துறையானது, நாடு தழுவிய ஆபரேஷன் முஸ்கான் XI என்ற முன்னெடுப்பின் கீழ் கடந்த மாதம் 7,600 குழந்தைகளை மீட்டது.
500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய சக்தி அமைப்புடன் முழுமையாக சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சட்டமன்றமாக டெல்லி சட்டமன்றம் மாறியுள்ளது.
JEE, NEET மற்றும் CAT போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக பாலக்காட்டில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் கற்றல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திட்டத்தின், SIGHT திட்டத்தின் கீழ் முதன் முதலில் நடத்தப்பட்ட ஏலத்தில், பசுமை அம்மோனியா ஒரு கிலோவிற்கு 55.75 ரூபாய் என்ற மிகக் குறைந்த விலையை இந்திய சூரிய ஆற்றல் கழகம் (SECI) பெற்றுள்ளது.