சீனாவின் செங்டுவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு compound men’s individual archery போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ் வெண்கலம் வென்றார்.
மும்பை நகரானது, ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் வானியல் மற்றும் வானியற்பியல் தொடர்பான 18வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது.
இந்தியக் கடற்படையானது, விசாகப்பட்டினத்தில் INS உதயகிரி (மும்பையில் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது.) மற்றும் INS ஹிம்கிரி (கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது) ஆகியவற்றை முதன்முறையாகப் படையில் இணைத்துள்ள நிலையில் இது பல்வேறு இந்தியக் கப்பல் கட்டும் தளங்களிலிருந்து பெறப்பட்ட இரண்டு முக்கிய கடற்படை போர்க் கப்பல்கள் ஒரு சேர படையில் இணைக்கப் பட்டதைக் குறிக்கிறது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது, இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் விக்ரம்-1 ஏவு கலத்தின் முதல் கட்டமான KALAM 1200 மோட்டாரின் / இயக்கியின் முதல் நிலைச் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
பிரதமர் சமீபத்தில் மூன்று புதிய வந்தே பாரத் விரைவு இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், மொத்த வந்தே பாரத் இரயில்களின் எண்ணிக்கை 150 என்ற எண்ணிக்கையைத் தாண்டியது.
கௌஹாத்தி சர்வதேச விமான நிலையம் ஆனது, அதன் மூங்கில் கட்டமைப்புகள் கொண்ட வடிவமைப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டடக்கலையில் சிறந்து விளங்குவதற்காக 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேசக் கட்டடக்கலை விருதை வென்றது.
4வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி (பட்டம் விடும்) திருவிழாவானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மகாபலிபுரத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற உள்ளது.
பழங்குடியினரை ஒரு பெரிய பேரழிவிலிருந்து பாதுகாத்ததற்காக டெண்டோங் மலையை கௌரவிக்கும் வகையில், சிக்கிமில் டெண்டோங் லோ ரம் ஃபாட் என்ற பழங்கால லெப்சா திருவிழா கொண்டாடப்பட்டது.
இந்திய அரசியலில் ஆளுகை மற்றும் அதிகாரப் பரவல் பற்றிய உள் கருத்துகளை கூறும் 'No Minister' என்ற புத்தகத்தினை சாந்தனு குப்தா என்பவர் எழுதியுள்ளார்.
நாட்டின் முதல் விலங்கு ஸ்டெம் செல் உயிரி வங்கியானது, ஐதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் தொடங்கப்பட்டது.
சரிபார்க்கப்பட்ட குறைந்த ஆபத்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சந்தை அணுகலை எளிதாக்குவதற்காக SWAGAT-FI எனும் ஒற்றைச் சாளர அமைப்பினை SEBI முன்மொழிந்துள்ளது.