சென்னையைச் சேர்ந்த 19 வயது S. ரோஹித் கிருஷ்ணா, இந்தியாவின் 89வது கிராண்ட் மாஸ்டராகியுள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவானது, விலங்கு நோய் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சிக்காக தென்னிந்தியாவின் முதல் உள்ளக உயிரியல் பாதுகாப்பு மூன்றாம் நிலை (BSL-3) ஆய்வகத்தை அமைக்க உள்ளது.
2024 ஆம் ஆண்டில் மாநிலக் காவல்துறை மற்றும் வனத்துறை ஆகியவை இணைந்து தொடங்கிய அசாமின் 'ஃபால்கன் நடவடிக்கை', ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களின் வேட்டையாடுதலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
சுதந்திரத் தினத்திற்கு முன்னதாக எந்தவொரு குறைபாடும் இல்லாத வகையிலான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படையின் மேகாலயா எல்லைப்புறப் பிரிவு, இந்திய-வங்காளதேச எல்லையில் மாநிலக் காவல்துறையுடன் இணைந்து 'அலர்ட் நடவடிக்கையினை' நடத்தியது.
இந்தியாவின் 20 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து அணி மியான்மர் அணியைத் தோற்கடித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு AFC U20 மகளிர் ஆசியக் கோப்பை 2026 போட்டிக்குத் தகுதி பெற்றது.
BEML லிமிடெட் நிறுவனமானது, மலேசியாவிலிருந்து 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு இரயில்-மெட்ரோ ஒப்பந்தத்தினை வென்றுள்ளது.
நாக்பூர்-புனே வந்தே பாரத் விரைவு இரயில் ஆனது, வர்தா, அகோலா, புசாவல் மற்றும் டவுண்ட் உள்ளிட்ட முக்கிய நிலையங்களை இணைத்து இந்தியாவின் மிக நீளமானப் பாதையில் இரயில் போக்குவரத்து சேவையினை வழங்குகிறது.
இந்தியாவின் 79வது சுதந்திரத் தினத்தின் போது லடாக்கின் கார்கில் பகுதியில் விளைந்த வாதுமைப் பழங்கள் ஆனது சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள லுலு உயர் சிறப்பு அங்காடியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன என்ற நிலையில் இது இந்தியா-சவுதி இடையிலான வேளாண் வர்த்தகத்தில் ஓர் உந்துதலைக் குறிக்கிறது.