இந்தியாவில் முதல் முறையாக, திருச்சியில் உள்ள எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சித் தொடக்கப்பள்ளி, அவசரக் காலங்களில் விரைவாக அடையாளம் காண்பதற்காக வகுப்பு மற்றும் பள்ளி முகவரி போன்ற மாணவர் விவரங்களைக் கொண்ட QR (விரைவுக் குறியீடு) குறியீடுகளுடன் கூடிய சீருடைகளை அறிமுகப் படுத்தி யுள்ளது.
கஜகஸ்தானின் ஷிம்கெண்டில் நடைபெற்ற ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியத் துப்பாக்கி சுடும் வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆடவர் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் 3 நிலைகள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
CRPF மற்றும் ITBP படைகளின் முன்னாள் தலைமை இயக்குநர் அனிஷ் தயாள் சிங் புதிய துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதரவற்றுக் கைவிடப்பட்ட நாய்களை மீட்பது மற்றும் பொறுப்பான செல்லப்பிராணி பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2004 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதியானது சர்வதேச நாய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.