இந்திய இராணுவத்தின் கிழக்குப் படைப் பிரிவின் ஸ்பியர் கார்ப்ஸ் பிரிவானது, கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தில் அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான ஆளில்லா விமானப் போர் மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்புத் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு, போர் தயார்நிலையை வெளிப்படுத்துவதற்காக கவாச் பயிற்சியினை நடத்தியது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடல்சார் அறிவியல் பேராசிரியரும் தலைவருமான R. ஆர்தர் ஜேம்ஸ், மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சபையிடமிருந்து சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு அறிவியலாளர் விருதைப் பெற்றார்.
மதியிறுக்க நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு (ASD) கொண்ட 17 வயது மாற்றுத் திறனாளி நீச்சல் வீராங்கனை ஜியா ராய், அமெரிக்காவில் 34 கிலோ மீட்டர் நீளத்திலான கேடலினா கணவாயை 15 மணி நேரத்தில் நீந்திக் கடந்த மதியிறுக்க நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு கொண்ட முதல் பெண்மணி என்றப் பெருமையினைப் பெற்றார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள உலகச் சமூகப் பாதுகாப்பு மன்றத்தில் சமூகப் பாதுகாப்பில் மகத்தான சாதனைப் படைத்ததற்காக இந்தியாவிற்கு 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சமூக பாதுகாப்பு சங்க (ISSA) விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, 2024 ஆம் ஆண்டு சர்வதேச சுகாதார விதிமுறைகளில் (IHR) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் பெருந்தொற்று அவசர நிலைக்கான புதிய வரையறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெருந்தொற்று அவசரநிலை என்பது, பல்வேறு நாடுகளில் பரவி, சுகாதார அமைப்புகளில் பற்றாக்குறையினை ஏற்படுத்தி, விரைவான சர்வதேச நடவடிக்கை தேவைப்படும் ஒரு தொற்று நோயால் ஏற்படும் உலகளாவிய சுகாதார நெருக்கடியாகும்.
ஃபோர்ப்ஸ் இதழின் நிகழ்நேர பில்லியனர்கள் கண்காணிப்பு அறிக்கையின் படி, எலோன் மஸ்க் 500 பில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டியதுடன், இந்த மைல்கல்லை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.