காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிர்வாகக் குழுவானது, 2030 ஆம் ஆண்டு நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக அகமதாபாத் நகரத்தைப் பரிந்துரைத்துள்ளது.
திருநர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சம வாய்ப்புக் கொள்கையை உருவாக்க உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் உறுப்பினராக திருநர்கள் உரிமை ஆர்வலர் அக்காய் பத்மஷாலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவில் கர்நாடகாவில் இருந்து இடம் பெற்ற முதல் திருநர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
முதுகெலும்பு ஆரோக்கியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டிற்கான உலக முதுகெலும்பு தினம் ஆனது ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Invest in Your Spine" என்பதாகும்.