கர்நாடகாவின் விஜயநகரத்தில் உள்ள தரோஜி சோம்பல் கரடி சரணாலயம் அருகே பட்டைக்கழுத்து செவி ஆந்தையானது முதன்முதலில் தென்பட்டது.
உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் உலக அமைதி, இரக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக பூடானின் திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா (GPPF) நடத்தப்படுகிறது.
பத்மஸ்ரீ விருது பெற்ற பியூஷ் பாண்டே விளம்பர ஜாம்பவான் அவரது 70 வது வயதில் காலமானார்.
இந்தியத் தலைமை நீதிபதி B.R. கவாய், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சூர்ய காந்தை அவருக்கு அடுத்தப்படியாக பதவி வகிப்பவராகவும், இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைத்தார்.
நிங்கோல் சகௌபா என்ற விழாவானது மெய்தே நாட்காட்டியில், முதன்மையாக மணிப்பூரில், ஒவ்வோர் ஆண்டும் ஹியாங்கேயின் சந்திர மாதத்தின் இரண்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் திருமணமான பெண்கள் தங்கள் பெற்றோர் வீடுகளுக்கு விருந்திற்கு அழைக்கப்படுகிறார்கள் என்பதால் நிங்கோல் என்றால் 'திருமணமான பெண்' என்றும், சகௌபா என்றால் 'விருந்துக்கான அழைப்பு' என்றும் பொருள்படும்.
2025 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் ஆனது அக்டோபர் 27 முதல் நவம்பர் 02 ஆம் தேதி வரை "Vigilance: Our Shared Responsibility" என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்படும்.
1892 ஆம் ஆண்டு பாரிஸில் சார்லஸ்-எமிலி ரெய்னாட் முதன்முதலில் இயங்குபட (அசைவூட்டப் படம்) நிகழ்ச்சியை நிகழ்த்தியதை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 28ம் தேதியன்று சர்வதேச இயங்குபடங்கள் தினம் அனுசரிக்கப் படுகிறது.