மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் இரயில் நிலையமானது சத்ரபதி சம்பாஜிநகர் ரயில் நிலையம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது, "Secure Banking: Powered by Identity, Integrity, and Inclusivity" என்ற கருத்துருவில், HaRBinger 2025 எனும் தனது நான்காவது உலகளாவிய ஹேக்கத்தானை அறிமுகப்படுத்தியது.
கடல்சார் பாதுகாப்பு, பெருங்கடல் ஆராய்ச்சி, பேரிடர் மீட்பு மற்றும் கடல் வளங்களின் நிலையான பயன்பாடு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டானது "ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக" அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய்-சோங்கிங்-செங்டு பாதையில் இரயில் போக்குவரத்து சேவைக்கு முந்தைய சோதனைகளின் போது சீனாவின் CR450 புல்லட் இரயில் ஆனது மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தை எட்டியதுடன், உலகின் அதிவேக இரயிலாக இது மாறியது.
பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 44 கிலோ எடைப் பிரிவில் ஒடிசாவினைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை பிரீதிஸ்மிதா போய் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் (IUML) தலைவர் அப்துல் சமத் பற்றிய “உலக அரங்கில் சிராஜ் உல் மின்னத்” என்ற புத்தகம் அவரது பிறந்த நாளான 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று சென்னையில் வெளியிடப் பட்டது.
வங்காள விரிகுடாவில் உருவான மோன்தா புயல், ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது.
வட இந்தியப் பெருங்கடல் பெயரிடும் முறையின் கீழ் தாய்லாந்து பரிந்துரைத்த நறுமணம் அல்லது அழகான மலர் என்று பொருள்படும் "மோன்தா" என்று இந்தப் புயலுக்குப் பெயரிடப்பட்டது.
உலக சிக்கன தினம் ஆனது அக்டோபர் 31 ஆம் தேதியன்று உலகளவிலும் மற்றும் அக்டோபர் 30 ஆம் தேதியன்று இந்தியாவிலும் அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவான "Conquer your Tomorrow" என்பது உலக சேமிப்பு மற்றும் சில்லறை வங்கி நிறுவனத்தினால் (WSBI) அறிமுகப் படுத்தப் பட்டது.