TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 31 , 2025 16 hrs 0 min 11 0
  • மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் இரயில் நிலையமானது சத்ரபதி சம்பாஜிநகர் ரயில் நிலையம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, "Secure Banking: Powered by Identity, Integrity, and Inclusivity" என்ற கருத்துருவில், HaRBinger 2025 எனும் தனது நான்காவது உலகளாவிய ஹேக்கத்தானை அறிமுகப்படுத்தியது.
  • கடல்சார் பாதுகாப்பு, பெருங்கடல் ஆராய்ச்சி, பேரிடர் மீட்பு மற்றும் கடல் வளங்களின் நிலையான பயன்பாடு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டானது "ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக" அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஷாங்காய்-சோங்கிங்-செங்டு பாதையில் இரயில் போக்குவரத்து சேவைக்கு முந்தைய சோதனைகளின் போது சீனாவின் CR450 புல்லட் இரயில் ஆனது மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தை எட்டியதுடன், உலகின் அதிவேக இரயிலாக இது மாறியது.
  • பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 44 கிலோ எடைப் பிரிவில் ஒடிசாவினைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை பிரீதிஸ்மிதா போய் தங்கப் பதக்கம் வென்றார்.
  • இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் (IUML) தலைவர் அப்துல் சமத் பற்றிய “உலக அரங்கில் சிராஜ் உல் மின்னத்” என்ற புத்தகம் அவரது பிறந்த நாளான 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று சென்னையில் வெளியிடப் பட்டது.
  • வங்காள விரிகுடாவில் உருவான மோன்தா புயல், ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது.
    • வட இந்தியப் பெருங்கடல் பெயரிடும் முறையின் கீழ் தாய்லாந்து பரிந்துரைத்த நறுமணம் அல்லது அழகான மலர் என்று பொருள்படும் "மோன்தா" என்று இந்தப் புயலுக்குப் பெயரிடப்பட்டது.
  • உலக சிக்கன தினம் ஆனது அக்டோபர் 31 ஆம் தேதியன்று உலகளவிலும் மற்றும் அக்டோபர் 30 ஆம் தேதியன்று இந்தியாவிலும் அனுசரிக்கப்படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவான "Conquer your Tomorrow" என்பது உலக சேமிப்பு மற்றும் சில்லறை வங்கி நிறுவனத்தினால் (WSBI) அறிமுகப் படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்