TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 24 , 2025 3 days 42 0
  • சென்னை செம்மஞ்சேரியில் ஓர் உலகளாவிய விளையாட்டு நகரத்தை நிறுவ தமிழ்நாடு அரசு 261 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
  • புதிதாகத் தொடங்கியுள்ள தீவிரவாதிகளின் ஊடுருவலைக் குறிவைத்து, இந்திய இராணுவமும் ஜம்மு & காஷ்மீர் காவல்துறையும் இணைந்து கிஷ்த்வாரில் சத்ரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.
  • தகவல் தொடர்பு அமைச்சகத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அஞ்சல் துறையானது தனது முதல் Gen Z தலைமுறை சார்ந்த கருத்துருவுடன் கூடிய தபால் அலுவலக வளாகத்தினை டெல்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் துவக்கியுள்ளது.
  • ஜெர்மனி அணியைத் தோற்கடித்து போர்ச்சுகலின் போர்டிமோவில் நடைபெற்ற உலகப் பறக்கும் வட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த WFDF உலகக் கடற்கரை அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
  • கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் குழுவின் (CAC48) 48வது அமர்வில் கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் குழுவின் (CCEXEC) நிர்வாகக் குழுவிற்கு இந்தியா ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இந்தியாவும் நேபாளமும் இரயில் அடிப்படையிலான சரக்குப் போக்குவரத்தினை, குறிப்பாக ஜோக்பானி-பிரட்நகர் வழித்தடம் மூலம் தாராளமயமாக்கவும் விரிவு படுத்தவும் இந்தியா-நேபாளப் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கான நெறிமுறையைத் திருத்தும் பரிமாற்ற அறிக்கையில் கையெழுத்திட்டன.
  • ஓமன் வானியல் மற்றும் விண்வெளி அமைப்பானது, SWAN வால் நட்சத்திரத்தினை (வால்மீன் C/2025 R2 SWAN) வெற்றிகரமாக கண்காணித்து புகைப்படம் எடுத்தது.
  • அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, அரியானாவின் குருகிராமில் அதன் முதல் முழு அளவிலான இந்திய உற்பத்தி மையத்தைத் திறக்க உள்ளது.
  • தெற்கு இரயில்வே நிர்வாகமானது, தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் நேர அட்டவணையிடப் பட்ட உள்-மண்டலத் தளவாடச் சேவையான 'Coast-to-Coast' பார்சல் சிப்பம் விநியோக விரைவு இரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்த இரயில் வேகமான, நம்பகமான மற்றும் செலவு குறைந்த பார்சல் இடமாற்றத்தை வழங்குவதோடு இந்திய இரயில்வே நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முதல் வகையான சேவையாகும்.
  • பெண் தொழில்முனைவோருக்கு வளங்கள், நிதி, வழிகாட்டுதல் மற்றும் வாய்ப்புகளை சமமாக அணுகுவதை ஊக்குவிப்பதற்காக நவம்பர் 19 ஆம் தேதியன்று உலகளவில் மகளிர் தொழில்முனைவோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்