ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லனின் சிலையுடன் புதிதாக கட்டமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
தீரன் சின்னமலையின் தளபதியாக இருந்த அவர் பிரிட்டிஷ் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்திய இரயில்வே நிர்வாகமானது, 2025‑26 ஆம் நிதியாண்டில் 1 பில்லியன் டன் சரக்கு ஏற்றுதலைக் கடந்து, நிலக்கரி, இரும்புத் தாது மற்றும் சிமெண்ட் ஆகியன அதிக பங்களிப்பைக் கொண்டு 1,020 மில்லியன் டன்களை எட்டியுள்ளது.
சீன தைபேயில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு ஆசியாவிற்கான உலகத் திறன்கள் போட்டிகளுக்கான தனது முதல் அணியை இந்தியா அனுப்புகிறது.
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான 19வது SURYAKIRAN கூட்டு இராணுவப் பயிற்சியானது உத்தரகாண்டின் பித்தோராகரில் தொடங்கியது.
பன்னாட்டுப் மெத்தம்பேட்டமைன் கடத்தல் வலையமைப்பைத் தடுக்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் டெல்லிக் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையாக கிரிஸ்டல் ஃபோர்ட்ரஸ் நடவடிக்கை நடத்தப்பட்டது.
நிதியியல் மற்றும் டிஜிட்டல் தளங்களில் அதன் பயன்பாட்டை தரப்படுத்துவதற்காக ஓமன் மத்திய வங்கி (CBO) ஓமன் ரியால் மதிப்பிற்கு (OMR) ஓர் அதிகாரப்பூர்வச் சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் சர்வதேச டென்னிஸ் புகழ் மன்றத்தில் இடம் பெறச் செய்வதற்கு ரோஜர் பெடரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தனது அறுபது ஆண்டு கால திரைத்துறை வாழ்க்கைக்குப் பிறகு 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூத்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மும்பையில் அவரது 89வது வயதில் காலமானார்.
தேசியக் கணக்குகளின் தொகுப்புகளை தொகுப்பதில் வழிமுறை மேம்பாடுகள் குறித்த விவாத அறிக்கையினை புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (MoSPI) வெளியிட்டது.
2022‑23 ஆம் நிதியாண்டை அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்தும் தேசிய கணக்குகளின் புதிய தொடர் ஆனது, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.