TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 30 , 2025 25 days 87 0
  • இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு ICC ஆடவர் T20 உலகக் கோப்பை போட்டிக்கான தூதராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1921 ஆம் ஆண்டு துல்சா இனப் படுகொலையில் இருந்து தப்பிய வயது முதிர்ந்த வயோலா பிளெட்சர், சமீபத்தில் அமெரிக்காவின் ஓக்லஹோமாவின் துல்சாவில் காலமானார்.
  • கொச்சியில் உள்ள மத்திய கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (CMFRI) ஆராய்ச்சியாளர்கள், அரேபியக் கடலில் ஒரு புதிய ஆழ்கடல் கணவாய் மீன் இனத்தைக் கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில் இதற்கு கடல் சார் உயிரியலாளர் E. G. சிலாஸின் நினைவாக டானிங்கியா சிலாசி என்று பெயரிடப்பட்டது.
  • தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2026 ஆம் ஆண்டில் சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனத்தின் (சர்வதேச IDEA) தலைவராகப் பணியாற்ற உள்ளார்.
  • இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI), அதன் 175வது ஸ்தாபன ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூரில் உள்ள இராஜஸ்தான் சர்வதேச மையத்தில் "Unearthing the Past, Shaping the Future: 175 Years of GSI" என்ற கருத்துருவில் சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்து.
  • 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான நகரமாக அகமதாபாத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.
  • உஸ்பெகிஸ்தானின் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிந்தரோவ், கோவாவில் நடைபெற்ற டைபிரேக்கர் போட்டிகளில் சீனாவின் வெய் என்பவரை தோற்கடித்து, இளம் FIDE உலகக் கோப்பை சாம்பியனானார்.
  • அபுதாபியில் நடைபெற்ற உலகத் தொழில்முறை ஜியு-ஜிட்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியத் தடகள வீரர் ஜியோவானா டி செக்யூரா வெண்கலம் வென்றார்.
  • குவாங்டாங் மாகாணத்தின் கைப்பிங்கில் ஜியாங்மென் நிலத்தடி நியூட்ரினோ ஆய்வகத்தை (JUNO) சீனா கட்டி முடித்துள்ளது.
  • புது டெல்லியில் நடைபெற்ற 44வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (IITF-2025) இந்தியா தனது வளமான பழங்குடியினக் கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தியது.
    • காட்சிப்படுத்தப்பட்டத் தயாரிப்புகளில் டசார் பட்டு நெசவு, பைட்கர் சுருள் ஓவியங்கள், அலங்காரத் தையல் மற்றும் கண்ணாடி வேலைப்பாடு கொண்ட ஜவுளி மற்றும் பரேவா சிலைகள் ஆகியவை அடங்கும்.
  • பொருளாதார வளர்ச்சி, சமூக நல்வாழ்வு மற்றும் குறைந்த உமிழ்வுக்கான பாதுகாப்பான, மலிவான, அணுகக் கூடிய மற்றும் நிலையானப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நவம்பர் 26 ஆம் தேதியன்று உலக நிலையானப் போக்குவரத்து தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை ஒரு முக்கிய முன்னுரிமைப் பகுதியாக வலுப்படுத்தும் வகையில் நவம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரை தேசியப் பச்சிளம் குழந்தைகள் வாரம் அனுசரிக்கப்பட்டது.
  • அனைத்து விமான நிலையங்களிலும் விமானப் பாதுகாப்பை வலுப்படுத்தச் செய்வதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது 2025 ஆம் ஆண்டு நவம்பர் 24 முதல் 28 ஆம் தேதி வரை "விமானப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தினை" அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்