TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 2 , 2025 23 days 107 0
  • சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் மெட்ரோவானது, ஆறு வழித்தடங்கள் மற்றும் 85 நிலையங்களில் 176 கிலோமீட்டர் நீளமுள்ள உலகின் மிகவும் நீளமான முழுவதுமாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ வலையமைப்பாக மாறியுள்ளது.
  • தெலுங்கானாவைச் சேர்ந்த சரயு வேல்புலா 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் 26வது பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) ஆனார்.
  • நார்வே திரைப்படமான "சேஃப் ஹவுஸ்" ICFT–UNESCO காந்தி பதக்கத்தைப் பெற்றது.
  • நாக்பூர் மாநில அரசானது உலர் காற்றில்லா செரிமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவின் மிகப்பெரிய நகராட்சி திடக்கழிவுகளிலிருந்து அழுத்தப் பட்ட உயிரி எரிவாயு (MSW-to-CBG) ஆலையை பந்தேவாடியில் அமைத்து வருகிறது.
  • அயர்லாந்தின் நிதியமைச்சர் பாஸ்கல் டோனோஹோ, உலக வங்கி குழுவின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை தகவல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • உலக வங்கி குழுமத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை அறிவு அதிகாரி (CKO) என்ற குறிப்பிட்ட மற்றும் புதிதாகப் பெயரிடப்பட்ட பதவியை வகிக்கும் முதல் நபர் இவர்தான்.
  • உத்தரப் பிரதேசம் பிரதான் மந்திரி சூர்ய கர் முஃப்த் பிஜ்லீ யோஜனாவின் கீழ் குடியிருப்புகளின் மேற்கூரையில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தியில் 1-ஜிகாவாட் திறனை (1,003.64 மெகாவாட்) தாண்டியுள்ளது என்பதோடு இது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது மாநிலமாக மாறியது.
  • 'ஈகிள் ஃபோர்ஸ்' நடவடிக்கையின் மூலம் தெலுங்கானாவின் கழுகுப் படை, போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (NCB), டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு மற்றும் நொய்டா காவல்துறை ஆகியவை நாடு தழுவிய நைஜீரிய போதைப்பொருள் கும்பலை முடக்கியது.
  • சிறந்தச் சுகாதாரக் கண்டுபிடிப்பு, அணுகல் மற்றும் தரத்திற்கான வலுவான கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்காக இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் அமைப்பின் (OPPI) 60வது ஆண்டு உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
    • இந்த உச்சிமாநாட்டின் கருத்துரு, 'Power of Partnerships' என்பதாகும்.
  • மாஸ்கோ சுற்றுலாவிற்கான இரண்டாவது பெரிய CIS (காமன்வெல்த் ஆஃப் இன்டிபென்டன்ட் ஸ்டேட்ஸ்) அல்லாத மூலச் சந்தையாக இந்தியா மாறியது.
    • 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஆண்டிற்கு 40% அதிகரிப்புடன் 40,800 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மாஸ்கோவிற்கு வருகை தந்தனர்.
  • மும்பையில் ஒரே நாளில், மிகப்பெரிய தொழில் துறை ஆலோசனை வழங்கீடு நிகழ்வினை நடத்தி இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) கின்னஸ் உலக சாதனை படைத்தது.
    • 7,400க்கும் அதிகமானப் பங்கேற்பாளர்களுடன் 6,166 மாணவர்கள் இதில் சாதனை அளவாக அதிகாரப் பூர்வமாகப் பங்கேற்ற ஒரு நிலையில் இது மும்பையில் நடைபெற்றது.
  • இலங்கையைத் தாக்கிய தித்வா புயலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக இந்தியா சாகர் பந்து என்ற நடவடிக்கையினை தொடங்கியது என்பதோடு இதில் INS விக்ராந்த் மற்றும் INS உதய்கிரியைப் பயன்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
  • வடக்குக் கடல் பாதை (NSR) வழியாக சீனா ஆர்க்டிக் எக்ஸ்பிரஸ் கப்பல் பாதையைத் தொடங்கியது.
    • இந்தப் பாதையானது தளவாடச் செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வினை 50% குறைப்பதோடு, செங்கடல் மற்றும் ஹார்முஸ் போன்ற நெரிசலான இடங்களைத் தவிர்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்