TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 4 , 2025 21 days 83 0
  • சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் "Viksit Bharat: Security Dimensions" என்ற கருத்துருவில் 60வது அகில இந்திய காவல்துறை இயக்குநர்கள் (DGP) மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் (IGP) மாநாடு நடைபெற்றது.
  • 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் 357 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி பதிவாகியுள்ளது என்பதோடு, இது கடந்தப் பத்தாண்டுகளில் பதிவான 100 மில்லியன் டன் அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • மாநிலத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக மேகாலயா தனது முதல் வடகிழக்கு இந்திய இயற்கை வேளாண்மை வாரத்தை அனுசரித்தது.
    • இயற்கை வேளாண்மையில் இளையோர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக 4வது IFOAM (சர்வதேச இயற்கை வேளாண் இயக்கங்களின் கூட்டமைப்பு) உலக இயற்கை வேளாண்மை இளையோர் உச்சி மாநாட்டையும் அம்மாநில அரசு நடத்தியது.
  • எல்லைப் பாதுகாப்புப் படையை (BSF) கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 01 ஆம் தேதியன்று BSF எழுச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • இந்தப் படையானது, இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்