TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 7 , 2025 18 days 91 0
  • 2024–25 ஆம் ஆண்டு விரிவாக்கத்திற்குப் பிறகு பதினொரு உறுப்பினர் நாடுகளைக் கொண்ட BRICS அமைப்பில் சேர தாய்லாந்து தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • செவ்ரான் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இந்தியா முதன்முறையாக அமெரிக்காவின் மேற்கு கடற்கரைக்கு ஜெட் விமான எரிபொருளை ஏற்றுமதி செய்துள்ளது.
  • இந்தியா-இந்தோனேசியா இடையிலான கூட்டுச் சிறப்புப் படைப் பயிற்சியான 10வது கருட சக்திப் பயிற்சி இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பக்லோவில் தொடங்கியது.
  • பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக (CDF) ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
  • மூங்கில் இறால் (அட்டியோப்சிஸ் ஸ்பைனிப்ஸ்) ஆனது 72 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகா மற்றும் ஒடிசாவில் மீண்டும் தென்பட்டுள்ளது.
    • லார்வாக்கள் உப்பு நீரில் வளரும் என்பதால், இந்த இனமானது ஓர் ஆம்பிட்ரோமஸ் (நன்னீர் மற்றும் உப்பு நீர் என இரண்டிலும் வாழும்) இனம் ஆகும்.
  • இந்தியக் கடற்படை தினம் ஆனது, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 04 ஆம் தேதியன்று கடற்படையினரின் துணிச்சலைப் போற்றும் விதமாகவும், இந்திய எறிகணைகளைத் தாங்கிய கப்பல்கள் கராச்சி துறைமுகத்தை வெற்றிகரமாகத் தாக்கிய ட்ரைடென்ட் (1971) நடவடிக்கையை நினைவு கூரும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Combat Ready, Cohesive, Self-Reliant" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்