2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 600 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நிகர மதிப்பைக் கொண்ட உலகின் முதல் நபராக எலோன் மஸ்க் ஆனார்.
2025–26 ஆம் ஆண்டு போட்டித் தொடரில் ஜார்க்கண்ட் அணியானது மாநிலங்களுக்கு இடையிலான 20-20 இறுதிப் போட்டியில் ஹரியானா அணியை வீழ்த்தி தனது முதல் சையத் முஷ்டாக் அலி டிராபி பட்டத்தை வென்றது.
சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER), தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் சிறந்த சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டு (HTA) நிறுவன விருதை வென்றது.