TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 25 , 2025 20 days 80 0
  • இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மகளிர் சர்வதேச 20-20 (T20I) கிரிக்கெட் போட்டியில் 4,000 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • கர்நாடகாவின் கார்வாரில் உள்ள அஞ்சதிப் தீவின் நினைவாக ‘அஞ்சதிப்’ ​​என்று பெயரிடப் பட்ட ஆழமற்ற நீர்நிலைகளில் இயங்கும் மூன்றாவது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலானது (ASW SWC) சென்னையில் இந்தியக் கடற்படையிடம் வழங்கப் பட்டது.
  • காஷிவாசகி-கரிவா அணுமின் நிலையத்தை சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியக் கடற்படையில் அதன் வகுப்பின் முன்னணி நீர்மூழ்கிக் கப்பலான INS சிந்துகோஷ், 40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு படையிலிருந்து நீக்கப் பட்டது.
  • இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான சுபம் அவஸ்தி, 2025 ஆம் ஆண்டிற்கான 40 வயதிற்குட்பட்ட 40 முன்னணி வழக்கறிஞர் விருதைப் பெற்றார்.
  • M.V. MSC மைக்கேலா கப்பலானது தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் (VOC) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அந்தத் துறைமுகத்தில் நிறுத்தக்கூடிய மிக அதிக கொள்கலன் சுமந்து செல்லும் திறன் கொண்ட மிகவும் நீளமான கொள்கலன் கப்பலாக மாறியது.
  • சென்னையைச் சேர்ந்த ஃபோட்டோனிக்ஸ் ஒடிஸி என்ற இந்தியக் குழுவானது, நாசாவின் 2025 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளிச் செயலிகள் சவாலில் மிகவும் உத்வேகம் கொண்ட குழு விருதை வென்றது.
    • இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் விரிவலை சேவை அணுகலை விரிவுபடுத்துவதற்காக மேம்பட்ட கட்டம் சார்ந்த செயற்கைக்கோள் இணைய அமைப்பை இக்குழு முன்மொழிந்தது.
  • 1957 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மஞ்சருபா நாடகக் குழுவின் ஸ்தாபன உறுப்பினரான மூத்த அசாமிய நடிகை ரஞ்சனா சர்மா போர்டோலோய், அவரது 80 வது வயதில் திப்ருகரில் காலமானார்.
    • அவர் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான தனது பங்களிப்புக்காக பிஷ்ணு ரபா விருதைப் பெற்றார்.
  • ஓமன் மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட, பலபடிச் சேர்மம் கொண்டு தயாரிக்கப் பட்ட அதன் முதல் ஒரு ரியால் பணத் தாளினை ஓமன் அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பலபடிச் சேர்மம் கொண்டு தயாரிக்கப்பட்ட பணத் தாள்கள் பாரம்பரியப் பருத்தி அடிப்படையிலான பணத் தாள்களை விட நீடித்து உழைக்கும் மற்றும் நீண்ட ஆயுட் காலம் கொண்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்