மாநில அரசு தமிழ்நாடு ஆனந்த் திருமணப் பதிவு விதிகள், 2026ஐ அறிவித்துள்ளது.
பொதுவாக ஆனந்த் கரஜ் என்று அழைக்கப்படும் ஆனந்த் திருமணங்கள், சீக்கிய திருமணச் சடங்குகளின்படி நடத்தப்படுகின்றன.
சென்னையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனிமேல் 'வள்ளலார் நெடுஞ் சாலை' என்று அழைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
திமுக அரசு தஞ்சாவூரில் உள்ள சோழர் அருங்காட்சியகத்தில் சோழ மன்னர் ராஜ ராஜ சோழனின் 125 அடி உயர சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.
கேப்டன் ஹன்சா சர்மா, இந்திய ராணுவத்தில் ஆயுதம் தாங்கிய ருத்ரா ஹெலிகாப்டரை ஓட்டத் தகுதி பெற்ற முதல் பெண் அதிகாரியாக மாறியுள்ளார்.
இந்தியா தனது முதல் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட பல்கலைக்கழக முன்னோடித் திட்டத்தை உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் (CCSU) தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் சர்வதேச வளர்ச்சிக்கு கனடாவின் பங்களிப்புகளை முன்னிலைப் படுத்தும் வகையில், 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் முழு வாரத்தில் (01-07) சர்வதேச மேம்பாட்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது.